ஆபத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் - இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

ஆபத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் - இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதுள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு எச்சரித்தார்.

ஆடை மற்றும் பொருட்களை வாங்கும் போது மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மக்கள் பொதுப் போக்குவரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதற்கிடையில் புத்தாண்டுக்காக கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சிறப்பு போக்குவரத்து சேவைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை மட்டும் 200 க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகளைச் பணியில் சேர்த்துள்ளது. சிறப்பு ரயில் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.