புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

இந்த முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு பொருட்களின் விற்பனைகள் அதிகரித்துள்ளன.

கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

இதன் காரணமாக பட்டாசு பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பல சவால்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த முறை விற்பனைகள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்