சலுகை விலையில் எரிப்பொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல்!

சலுகை விலையில் எரிப்பொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல்!

சலுகை விலையின் கீழ் உற்பத்தி நாடுகளில் இருந்து நேரடியாக எரிப்பொருளை கொள்வனவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா, கட்டார், குவைட், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இவ்வாறு எரிப்பொருளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 270 நாட்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் எரிப்பொருள் உற்பத்தி நாடுகளின் பிரதான நிறுவனங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்கும், இந்த திட்டத்தினால் இலங்கை பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படுத்துமா என்பது தொடர்பிலும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றது.

அதன் முடிவுகளின் அடிப்படையில் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் கலந்துரையாடி, அரசாங்கத்தினால் சலுகை விலையில் எரிப்பொருள் கொள்வனவு செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இலங்கை வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிப்பொருளை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது