நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியின் ஒரு பகுதியில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கை ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வீதியின் ஒரு பகுதி நேற்றைய தினம் தாழிறங்கியுள்ள நிலையில் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது