பெண் ஒருவரின் உயிரை காவுகொண்ட வீதி விபத்து!
ராகலை - நுவரெலியா பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சூரிய காந்தி பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ராகலை நகருக்கு இடைப்பட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்தது
அதேநேரம், முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த மேலும் மூன்று பிள்ளைகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது