அபிவிருத்தி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் வெடிப்புக்குள்ளான நுவரெலியா - தலவாக்கலை வீதியின் ஒருபகுதி

அபிவிருத்தி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் வெடிப்புக்குள்ளான நுவரெலியா - தலவாக்கலை வீதியின் ஒருபகுதி

நுவரெலியா- தலவாக்கலை வீதியின் டெஸ்போர்ட் தேவாலயத்துக்கு அருகில் உள்ள பாதையின் ஒரு பகுதி வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பாதை புணரமைக்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இவ்வாறு பாதையின் ஒரு பகுதி வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

தரமற்ற அபிவித்தி நடவடிக்கைகளின் காரணமாகவே இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் எமது செய்திச்சேவையில் பல முறை வெளிப்படுத்தப்பட்டது.

எனினும் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் பொறுப்பாக செயற்படாமையே இதுபோன்ற நிலைக்கு காரணமாகும்