இன்றைய வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (10) மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழை வீழ்ச்சி பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இன்று (10) நுரைச்சோலை, கறுவலகஸ்வெவ, பளுகஸ்வெவ, உஸ்வெவ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது