ஐக்கிய பெண்கள் சக்தியின் உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழ் பெண்!

ஐக்கிய பெண்கள் சக்தியின் உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழ் பெண்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளரான உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய பெண்கள் சக்திக்கான உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவினாால் கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து இன்று இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலைமையில் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.