பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்; நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை எச்சரிக்கை!

பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்; நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை எச்சரிக்கை!

சீட்டிழுப்பொன்றில் வெற்றி பெற்றுள்ளதாக பொதுமக்களை நம்பவைத்து பணம் பறிக்கும் சந்தேகநபர்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையினால் நடத்தப்படும் மாதாந்த சீட்டிழுப்பில் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பரிசை பெறுவதற்காக ஒரு  தொகை பணத்தை செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்களை ஏமாற்றி இந்தக் குழுவினர் பணம் பறித்துவந்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டது போன்ற எந்தவொரு சீட்டிழுப்போ, வேறு எந்தகையிலானதொரு அறவீடோ நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினாலோ, விசாரணை அதிகாரிகளாலோ மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்களுக்கு அவ்வதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.

எவரேனும் நபரொருவர் அல்லது குழுவினர் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரிலோ விசாரணை அதிகாரிகளின் பெயரிலோ பணத்தைக் கோரினால் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் கோரியுள்ளது