நாட்டில் நேற்று அதிகளவான தொற்றாளர்கள் யாழ். மாவட்டத்தில் பதிவு

நாட்டில் நேற்று அதிகளவான தொற்றாளர்கள் யாழ். மாவட்டத்தில் பதிவு

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 343 பேரில் அதிகமானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 68 பேருக்கும் கம்பஹாவில் 39 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 34 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 94,336 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 91 ஆயிரத்து 44 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 699 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்