நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!

நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!

இலங்கை கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்காக நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3. 423 பில்லியன் ரூபா (19.022 மில்லியன் அமெரிக்க டொலர்) இழப்பீடு கோரி சட்ட மா அதிபர் ஆவணங்களை அனுப்பியுள்ளார்.

சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 செப்டெம்பரில் இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் எம்.ரி. நியூ டயமன்ட் என்ற எண்ணெய் கப்பல் தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது