நாயை கடிக்கத் துாண்டி காவல்துறை உத்தியோகத்தருக்கு காயமேற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

நாயை கடிக்கத் துாண்டி காவல்துறை உத்தியோகத்தருக்கு காயமேற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

தமது பணியின் நிமித்தம் வீடொன்றிற்குச் சென்றிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு அவ்வீட்டிலிருந்த நாயை கடிக்கத் துாண்டி காயமேற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று மினுவாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை - நில்பனாகொடையைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்று குறித்த விசாரணைக்கு முன்னிலையாகியிருக்கவில்லை. இதன் காரணமாக காவல்நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் காவல்துறை உத்தியோகத்தர்களைக் கண்ட சந்தேக நபர் வீட்டினுள் சென்று அங்கிருந்த நாயை கடிக்கத் துாண்டி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, கான்ஸ்டபிள் ஒருவரின் காலை நாய் கடித்துள்ளதோடு காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் கம்பஹா பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்