நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் விபரங்கள்
நாட்டில் நேற்றைய தினம் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் நேற்று மரணித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் மரணித்தார்.
கொவிட் தொற்றால் மோசமடைந்த நாட்பட்ட சிறுநீரக நோய், குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, நியுமோனியா மற்றும் நீரிழிவு நிலைமையே அவரது மரணத்திற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெஹிவளை பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் நேற்று மரணித்தார்.
கொழும்பு தெற்கு பேதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதனை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர் மரணித்தார்.
மோசமான மாரடைப்பு, குருதி விசமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உயர் குருதி அழுத்தம், மற்றும் நியூமோனியா நிலைமை காரணங்களால் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது