நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (09) கிரிந்தேகம, பக்குனவல, பாதெனிய, எலகொமுவ, யொதகனாவ, பளுகெக்குளுகட மற்றும் குமணாறு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது