நாடாளுமன்ற வாக்குவாதம் தொடர்பில் அமைச்சர் சமல் கவலை!

நாடாளுமன்ற வாக்குவாதம் தொடர்பில் அமைச்சர் சமல் கவலை!

நாடாளுமன்றில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சர்த் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாக்குவாதத்தினால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதையடுத்து, முற்பகல் 10.35 அளவில், சபை நடவடிக்கைகள் சபாநாயகரினால் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீள ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, இன்றைய சபை அமர்வு ஆரம்பத்தின்போது, சபாநாயகர் விளக்கமளித்தார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில், சபையில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள், கறுப்புப் பட்டியை அணிந்தவாறு சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதையடுத்து, சபாநாயகரினால் சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.