அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் குறித்த நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உருவாக்கினார்.
அதன்படி இந்த ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் 16ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் வகையில் தற்போது இதன் கால வரையறையை நீடிப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.