பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திரம்

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திரம்

பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கமைய பாம் எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் - மேற்கண்ட தொழில்களை பாதிக்காது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், முள் தேங்காய்களை வளர்ப்பதற்கும் தடை விதிக்க ஜனாதிபதி முடிவு செய்த பின்னர் பேக்கரி மற்றும் பிஸ்கட் தொழில் அழிக்கப்படும் என்ற கருத்து இருந்தாலும், அந்த தொழிலதிபர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இதற்காக அவர்களுக்கு சிறப்பு உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்