மட்டக்களப்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்!

மட்டக்களப்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்!

கடந்த மாதமும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் கடந்த மாதம் 493 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மாதம் இதுவரையான காலப்பகுதி வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 2571 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 668 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 384 பேரும், குருநாகலை மாவட்டத்தில் 254 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 242 பேரும், கண்டி மாவட்டத்தில் 172 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 159 பேரும் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி நாடளாவிய ரீதியில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 5425 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது