பம்பலப்பிட்டியில் சூதாட்ட நிலையமொன்றிலிருந்து ஐந்து சீன பிரஜைகள் கைது

பம்பலப்பிட்டியில் சூதாட்ட நிலையமொன்றிலிருந்து ஐந்து சீன பிரஜைகள் கைது

பம்பலப்பிட்டி பகுதியில் ரகசியமாக நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையம் ஒன்றிலிருந்து ஐந்து சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி காவற்துறையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றி வளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் குறித்த சூதாட்ட நிலையத்தை நடாத்திச் சென்ற சீன நாட்டு பெண் ஒருவரும் அடங்குவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சூதாட்ட நிலையத்திலிருந்து 10 இலட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபா பணமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது