ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளை அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது