ஆடையில் குளிர்பான விளம்பரம்… மொயின் அலியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதா சிஎஸ்கே நிர்வாகம்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி தனது ஜெர்ஸியில் மதுபானங்களின் விளம்பரங்கள் இடம்பெறக் கூடாது என வேண்டுகோள் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் அவருக்கான ஜெர்ஸியில் மதுபான நிறுவனங்களின் லோகா மற்றும் விளம்பரம் இடம்பெற வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்ததாகவும், அதை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதை சிஎஸ்கே நிர்வாகம் மறுத்துள்ளது. அவர் அதுபோல எந்தவொரு கோரிக்கையும் வைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.