நாட்டில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம்! கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்
வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறையில் வெள்ளரிப்பழம் மற்றும் தர்ப்பூசணி உள்ளிட்ட பழவகைகள் அதிகளவு விற்பனையாகி வருவருகின்றது.
அம்பாறை - சம்மாந்துறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களிலேயே அதிகளவு வியாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களும் குறித்த பழங்களை கொள்வனவு செய்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேவேளை வெளி இடங்களில் இருந்து அம்பாறைக்கு கொண்டு வரப்படுகின்ற பழ வகைகளின் தரங்களை சுகாதார பரிசோதகர்கள், ஒவ்வொரு நாளும் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் குறித்த வெள்ளரிப் பழங்கள் அதன் பரமனுக்கு ஏற்ப 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் தர்ப்பூசனியானது 70ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
இந்த வெள்ளரிப்பழம் மற்றும தர்ப்பூசணிகள் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது