தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 152 பேர்
வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று (04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று (04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, காலி, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குறித்த நபர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர். இதன்போது பாதுகாப்பு தரப்பினருக்கும் அரசாங்கத்திற்கும் அவர்களது நன்றியை தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.