இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் பதுளையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் பதுளையில் ஆர்ப்பாட்டம்!

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் பதுளையில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

ஊவா மாகாண சபை கட்டட தொகுதிக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று(6) முற்பகல் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து பேரணியாக ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றிருந்தனர்.

இதனால் அந்த பகுதியுடனான போக்குவரத்திற்கு சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

1997 மற்றும் 2006ஆம் ஆண்டுகளின் வேதன முறைமையை அமல்படுத்தாமை, சட்டத்திற்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கியமை உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது