
பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக வெளியான புதிய தகவல்
பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தானது வீதியின் தன்மையினால் நிகழவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய விசாரணை குழுவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற மறுதினம் அது தொடர்பில் ஆராய்வதற்கு குறித்த மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, பாரவூர்தியின் சாரதி மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோரே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான பயற்சியாளரான டபிள்யூ. ஏ.வீரதுங்க தெரிவித்துள்ளார்