
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையை பரிசீலித்த குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (05) கையளிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவிருந்த நிலையில் மேலதிக பரிசீலனைக்காக குறித்த குழு இரண்டு வார காலவகாசத்தினை பெற்றிருந்தது.
இதற்கமைய அமைச்சரவை கூடுவதற்கு முன்னர் இன்றைய தினம் அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினர் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் 4 ஆவது நாளாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்