வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி! இருவர் படுகாயம்
திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்துச் சம்பவம் இன்று(4) மாலை இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 2 சிறுவர்களோடு, தாயும் தந்தையும் பயணித்ததாகவும் தந்தையும் ஒரு பிள்ளையும் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.