அனுமதிப்பத்திரமின்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற நால்வர் கைது!
நாவுல - எலஹெர வீதியின் பகமுண பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி வெடிப்பொருட்களை கொண்டுச் சென்ற 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 வோடர் ஜெல் குச்சிகள், 20 கிராம் வெடி மருந்து, 14 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 24 -43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது