பெருந்தொகையான வெடிபொருட்களுடன் நால்வர் கைது

பெருந்தொகையான வெடிபொருட்களுடன் நால்வர் கைது

பெருந்தொகையான வெடிபொருட்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவுல, எலஹெர வீதியில் உள்ள பகமுனா பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெடிபொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் water gel , 20 கிராம் gun powder , 14 detonator caps, wire rolls, a stone drill மற்றும் பல பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளையில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தினமான இன்று இவ்வாறு வெடி பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.