நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து தொடர்ந்து பரிசீலிக்கப்படும் - ஜனாதிபதி (காணொளி)

நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து தொடர்ந்து பரிசீலிக்கப்படும் - ஜனாதிபதி (காணொளி)

நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும்.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே தாம் தொடர்ந்தும் நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலும் கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகுமானால் தன்மீது குற்றம் சுமத்துமாறு ஜனாதிபதி அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படும்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.