சித்திரைப் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வருட சித்திரை புத்தாண்டில் வீடுகளில் உள்ளவர்கள் மாத்திரம் இணைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபட முடியும்
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்ந்தும் தொடர்பை பேணியவர்களுடன் மாத்திரம் குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குறித்த வழிகாட்டல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த புத்தாண்டின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பொறுத்தமற்றதெனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது