ஐ.தே.க.வுடன் இணைந்த அமைப்புக்களை மீள கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம்

ஐ.தே.க.வுடன் இணைந்த அமைப்புக்களை மீள கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த சகல அமைப்புக்களையும் மீள கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்