சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுணத்தீவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு உழவு இயந்திரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணத்தீவு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்