வெள்ளவத்தை சர்வதேச பாடசாலை ஒன்றில் 15,000 அல் குர்ஆன் புத்தகங்கள் மீட்பு
வெள்ளவத்தையில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் சுமார் 15,000 அல் குர்ஆன் புத்தகங்கள் சேமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல புத்தகங்கள் பொலிஸ் காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், புத்தகங்களின் உள்ளடக்கங்கள் வெளிவரும் வரை குறித்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.