புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை நாளை (காணொளி)
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை நாளை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டைக் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், ஆபத்துநிலை உள்ள நபர்களுக்கும், தடையின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசி ஏற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு முன்னதாக தெரிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசி ஏற்றம், இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர இன்று மாலை தெரிவித்துள்ளார்.
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பாதிப்பு கூடிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கும் தொடர்ந்தும் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்