அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை! அனைத்திற்கும் சீல் வைப்பு
தம்புள்ளையில் பறிமுதல் செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் அவை சேமித்து வைக்கப்பட்டிருந்த இடங்கள் அனைத்திற்கும் இன்று சுகாதார அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் அடுத்த திங்கட்கிழமை தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின் பகுதியில் நேற்று இரவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் லொரி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இவற்றுக்கு எந்த ஒரு அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.