களனி புதிய பாலத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த மகிழுந்து (படங்கள்)

களனி புதிய பாலத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த மகிழுந்து (படங்கள்)

களனி புதிய பாலத்துக்கு அருகில் மகிழுந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.