நாட்டில் நேற்று மொத்தமாக 12 விபத்து மரணங்கள்! (காணொளி)

நாட்டில் நேற்று மொத்தமாக 12 விபத்து மரணங்கள்! (காணொளி)

நேற்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும் ,உந்துருளியில் பயணித்த இருவரும்,பாதசாரிகள் ஐந்து பேரும்,பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா-ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன், தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது