இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று!

இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று!

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ப்பான் பதானுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் தமது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தனக்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்ற போதிலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இர்ப்பான் பதான் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சுகாதார விதிகளுக்கமைய, இர்ப்பான் பதான் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் அவர், சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்றிருந்தார்.

இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யூசுப்பதான் மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோருக்கு முன்னதாக கொவிட் 19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது