1,766 பயணிகள் இலங்கை வருகை

1,766 பயணிகள் இலங்கை வருகை

இன்று காலை 8.30 மணி உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் விமானங்களின் ஊடாக 1,766 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்..

இந்த காலப்பகுதிக்குள் 17 சரக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம், 12 விமானங்களின் ஊடாக 741 பேர் கட்டார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, கடந்த 24 மணிநேரத்தில் 148 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்