காதலன் மீது அசிட் வீசிய காதலி!

காதலன் மீது அசிட் வீசிய காதலி!

தன்னை காதலித்து ஏமாற்றியதாக காதலி தனது காதலன் மீது அசிட் வீசிய சம்பவம் தற்பொழுது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவின்-ஆக்ரா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த செவிலி பெண் ஒருவரும் நோயியல் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரியும் நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் குறித்த செவிலி பெண்ணின் காதலனுக்கு வீட்டில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுவதாகவும் அதற்காக வேறு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும் காதலன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த பெண் குறித்த நபரை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து, அவரது முகத்தில் அசிட் வீசியுள்ளார்.

அசிட் வீசப்பட்டதால் வலியில் துடித்த நபரை பிரதேசவாசிகள் மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது