இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை விரைவில்

இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை விரைவில்

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாகக் கூறப்படும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை விரைவில் வழங்க உள்ளதாக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி ராதிகா சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினால் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது