கழிவறையை சுத்தம் செய்யும் தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிய நல்வர்

கழிவறையை சுத்தம் செய்யும் தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிய நல்வர்

பலாங்கொடையில் வாராந்த சந்தைக்கு அருகே உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தம்பதியரை தாக்கிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பலங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான கழிப்பறை ஒரு ஒப்பந்தக்காரருக்கு சுத்தம் செய்ய வாடகைக்கு விடப்பட்டது,

குறித்த ஒப்பந்தக்காரருக்கு கீழ் பணிபுரிந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இவர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய அறையின் கதவை சந்தேகநபர்கள் தட்டியதை சிசிடிவி காட்சிகள் காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பலாங்கொடை அடிப்படை மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்