கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.

இதன்படி இக் காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 பேர் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நாடு திரும்பிய அனைவரும் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் சுற்றுலா விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இக் காலப்பகுதியில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் 742 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.