பண்டிகைக்காலத்தில் பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்
எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் கொரோனா அச்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதால், பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலங்களில் பொது மக்கள் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதால்,கொரோனா பரவுவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இசைநிகழ்ச்சிகளை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் விதுர விகரமநாயக்க தெரிவித்துள்ளார்