இலை சோர்வு நோய் நிலை காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்

இலை சோர்வு நோய் நிலை காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள்

உருளை கிழங்கு பயிர்களுக்கு ஏற்படுகின்ற இலை சோர்வு நோய் நிலை காரணமாக நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நுவரெலியா, மீபிலிமான, கந்தப்பளை, பலல்பத்தனை, இரத்னாயக்கபத்தனை, ராகலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள் இந்த முறை பெரும்போகத்திற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கையை ஆரம்பித்தனர்.

இந்தமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள உருளை கிழங்கு விதையை அவர்கள் பயிரிட்டுள்ளனர்.

குறித்த உருளை கிழங்கு விதை 50 கிலோகிராம், 18 ஆயிரத்து 500 ரூபா முதல் 22 ஆயிரத்து 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தநிலையில் உருளைகிழங்குகளுக்கு ஏற்பட்டுள்ள இலை சோர்வு நோய் நிலை தொடர்பில் குறித்த பகுதி மக்கள் விவசாய திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளனர்.

எனினும் அதற்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மேலும் சில பகுதிகளிலுள்ள விவசாயிகள் தங்களது உற்பத்திகளுக்கு போதிய விலை இல்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

வெலிமடை, ஹாலி-எல, பண்டாரவளை பகுதிகளில் உருளை கிழங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதற்காக தங்களுக்கு போதிய விலை வழங்கப்படுவதில்லை என அங்குள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.