பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தல் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தல் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக பொலிஸார், சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வலியுறுத்தினார்.

இதேவேளை கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.