சமிந்த வாஸ் மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்தார்!
இலங்கை கிரிக்கட் அணியின், வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக, அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.
ஏற்கனவே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களை முன்வைத்து, பதவியிலிருந்து விலகினார்.
இது தொடர்பாக, ஸ்ரீலங்கா கிரிக்கட் முகாமைத்துவத்திற்கும், அவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, அவரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்ட நிலையில், சமிந்த வாஸ் தமது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுக்கொண்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது