நச்சுத் திரவ பீப்பாய்களில் தேங்காய் எண்ணெய்யை களஞ்சியப்படுத்திய வர்த்தகருக்கு அபராதம்

நச்சுத் திரவ பீப்பாய்களில் தேங்காய் எண்ணெய்யை களஞ்சியப்படுத்திய வர்த்தகருக்கு அபராதம்

நச்சுத் தன்மையான திரவங்களை களஞ்சியப்படுத்தப் பயன்படும் பீப்பாய்களில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய்யை களஞ்சியப்படுத்தி விநியோகித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட வர்த்தகர் ஒருவருக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் 60,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த எண்ணெய்யை அப்புறப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட வர்த்தகர் கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்ந்தும் இந்த செயலில் ஈடுபட்டால் மீண்டும் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாளிகாகந்த நீதவான் கோசல சேனாதீர பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்