சிங்கராஜா வன காடழிப்பு தொடர்பில் யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிங்கராஜா வன காடழிப்பு தொடர்பில் யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிங்கராஜா வனத்தை எந்த நேரத்திலும் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பொதுச்செயலாளர் வைத்தியர் புஞ்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை 8000 ஹெக்டர் பரப்பளவிலான சிங்கராஜா வனத்தில் உயிரின பல்வகைமை தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த திட்டமும் மேற்கொள்ளப்படாது எனவும் வைத்தியர் புஞ்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிங்கராஜா வனத்தில் எவ்வித காடழிப்பும் இடம்பெறவில்லையென யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிங்கராஜா உலக பாரம்பரிய வனப்பகுதியில் 5 ஹெக்டேயர் பரப்பளவில் இரண்டு நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்க யுனெஸ்கோவிற்கு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இதுவரை யுனெஸ்கோ பதிலளிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது, ​​சிங்கராஜா உலக பாரம்பரிய வனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.